``அப்பாவோட கண்கள்தான் எனக்கும் பிடிக்கும்" - விஜயகாந்த் விழாவுக்கு வீடியோ அனுப்பிய மகன்!

திரைத்துறையில் விஜயகாந்த் வந்து 40 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தே.மு.தி.க சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பபையில் விழா கொண்டாடப்பட்டது.

திரைத்துறையில் விஜயகாந்த் கால்பதித்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி தே.மு.தி.க சார்பில் விஜயகாந்துக்கு விழா எடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நடைபெற்ற இந்த விழாவில் திரைத்துறையைச் சார்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு விஜயகாந்த் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

விஜயகாந்த் 40வது ஆண்டுவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நேற்று காலை 11 மணியிலிருந்தே தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர். மதியம் 2 மணிக்கு விழா அரங்குக்கு வந்த விஜயகாந்த் தே.மு.தி.க கொடியை ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் பிறகு மீசை ராஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்கள் விஜயகாந்த் பற்றிப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து விஜயகாந்த் மேடைக்கு வந்தார். விஜயகாந்த் வந்த பிறகு இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், விக்ரமன், எஸ்.ஏ. சந்திரசேகர், மகாராஜன், மனோபாலா உள்ளிட்டவர்கள் பேசினார்கள். சத்யராஜ், சரத்குமார், நாசர் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டு விஜயகாந்த்துடனான தங்கள் நெருக்கத்தையும், நட்பையும் பற்றிப் பேசினார்கள். நிகழ்ச்சியில்  ரேகா, அம்பிகா ஆகிய நடிகைகள் மட்டுமே கலந்துகொண்டனர்.

விஜயகாந்த் 40வது ஆண்டுவிழா, படப்பை

நிகழ்சியின்போது சண்முக பாண்டியன் பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. ``நான் தற்போது லண்டனில் இருப்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.  அப்பாவோட கண்கள்தான் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கும் அந்த கண்கள் ரொம்பப் பிடிக்கும்.  லண்டனில் புகழ்பெற்ற ஒருவரிடம் அப்பாவின் கண்களை எனது கையில் டாட்டுவாக வரைந்திருக்கிறேன்” என வலது கையில் வரைந்த டாட்டுவை காட்டினார். இரவு 11 மணியை கடந்தும் கூட்டம் கலையவில்லை. விஜயகாந்த் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்தது மாநாடு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!