ராம் மோகனராவை கைது செய்து விசாரிக்க வேண்டும்..! - அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகனராவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, காமராஜ் பல்கலைக்கழக உயரதிகாரிகளின் பாலியல் வேட்கைக்கு கல்லூரி மாணவிகளை உட்படுத்தும் நோக்கில் அவர்களிடம் பேசியுள்ளார். அந்த ஆடியோ நேற்று வெளியாகி வைரலானது. இந்த நிலையில், நிர்மலா தேவியை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கல்லூரி வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'கல்லூரி பேராசிரியரின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. கறுப்பு ஆடுகள் களையெடுக்கப்படும். அந்தப் பேராசிரியரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் என்கவுன்டர் செய்யப்பட வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகனராவை கைதுசெய்து விசாரிக்க வேண்டும். அதிகாரிபோல் அல்லாமல் அரசியல்வாதியாகத்தான் ராம் மோகனராவ் செயல்பட்டார்' என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!