வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (16/04/2018)

கடைசி தொடர்பு:13:06 (16/04/2018)

நிர்மலா தேவிக்கு எதிராகக் கல்லூரி வாசலில் கொந்தளித்த பொதுமக்கள்!

நிர்மலா தேவி விவகாரம்

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்குத் திருப்ப முயன்றது தொடர்பான ஆடியோ வெளியாகி, தமிழகம் முழுதும் பெரிய அளவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலா தேவி விவகாரம்
 

நிர்மலா தேவி

 

இந்த நிலையில், இன்று கல்லூரி முன்பு பொதுமக்கள், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். மாணவிகளைத் தவறான பாதைக்குக் கொண்டு செல்ல முயன்ற, உதவி பேராசிரியர் நிர்மலாதேவி மற்றும் கல்லூரி நிர்வாகத்தையும், பல்கலைக்கழக அதிகாரிகளையும் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் நடக்கும் போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி வழக்கறிஞர் நிர்மலா ராணி கலந்து கொண்டுள்ளார். அந்தக் கல்லூரியில் இன்று காலை அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க