வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (16/04/2018)

கடைசி தொடர்பு:14:45 (16/04/2018)

வாக்கிங் சென்ற வியாபாரிக்கு நடந்த கொடூரம்! சென்னையில் பயங்கரம்

கொலை

சென்னை மேடவாக்கத்தில் வாக்கிங் சென்ற மீனவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மேடவாக்கம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், மீன் வியாபாரம் செய்துவந்தார். இன்று அதிகாலை வீட்டின் அருகில் வாக்கிங் சென்றார். அப்போது அவரை வழிமறித்த மர்மக் கும்பல், சீனிவாசனை அரிவாளால் வெட்டியது. இதனால் கொலை கும்பலிடமிருந்து தப்பிக்க சீனிவாசன் ஓடினார். ஆனால், அந்தக் கும்பல் விடாமல் விரட்டி வெட்டியது. கழுத்து, தலை, கை, கால்கள் எனப் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால், ஓட முடியாமல் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன் பிறகு, அவரைக் கொலை செய்த கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சீனிவாசனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீனிவாசன் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சீனிவாசனுக்கு மனைவியும் மகனும் உள்ளனர். இந்தக் கொலை நடந்தபோது அவர்கள் வீட்டுக்குள்தான் இருந்துள்ளனர். சீனிவாசன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு வந்து கதறி அழுதது கல் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. 

சென்னையில் பட்டப்பகலில் நடந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.