அம்பேத்கருக்கு மத்திய அரசு அளித்த பெருமை - பட்டியலிட்ட பொன்.ராதாகிருஷ்ணன்

இதுவரை இருந்த மத்திய அரசு அம்பேத்கரை கண்டுகொள்ளவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

'இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டுகொள்ளவில்லை' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்


மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் வடசேரி பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், இறச்சகுளத்தை அடுத்த அம்பளம்துருத்தியில் பட்டியலின மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டுக்கொண்டு மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ''மனிதர்களில் யாரும் தாழ்ந்தவரும் இல்லை, யாரும் உயர்ந்தவரும் இல்லை; அனைவரும் சமம் என்ற மாமனிதர், அம்பேத்கர். அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக அனைத்து தலைவர்களும் தேர்வுசெய்த ஒரே தலைவர் அம்பேத்கர்தான். இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டுகொள்ளவில்லை.

மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்தபிறகு, அம்பேத்கர் பிறந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியிருக்கிறார். லண்டனில் அம்பேத்கர் பயின்ற கல்வி நிலையத்தில் பட்டியலின மாணவர்களைப் படிக்கவைக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். பட்டியலின மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக, மாதம் 25,000 ரூபாய் வழங்க மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!