ஸ்ரீ வில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயிலில் நடந்த தீமிதி விழா!

ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுர சந்தன மாரியம்மன் கோயிலில் வருடா வருடம் சித்திரைத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஏப்ரல் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது கோயில் விழாவிழா. வருடா வருடம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள். அதற்காக நேற்று காலையில் கோயில் முன்பு தீ வளர்க்கப்பட்டது.

தீமிதி

பிறகு, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 2,000 பக்தர்கள் காப்பு கட்டி வீதிகளில் வளம் வந்து 3 மணிக்கு மேல் பூக்குழியில் இறங்கி தீ மிதித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதியுலாவும் இன்று மதியம் தேரோட்டத் திருவிழாவும் கோலாகலமாக நடைபெற்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!