நிர்மலா தேவி மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு!

நிர்மலா தேவி

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற உதவிப் பேராசிரியர் வீட்டில் காவல்துறையினர் குவிந்துள்ளனர்.

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்குத் திருப்ப முயன்றது தொடர்பான ஆடியோ வெளியாகி, தமிழகம் முழுதும் பெரிய அளவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயன்ற நிலையில் இன்று கல்லூரி முன் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள், மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். மாதர் சங்க நிர்வாகி நிர்மலா ராணி, பெண்களைத் தவறாக வழி நடத்திய பேராசிரியர் நிர்மலாதேவி மீது வழக்கு பதிவு செய்யாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று உறுதியாகக் கூறியதால் தற்போது அவர்மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மூன்று பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், நிர்மலாதேவி வீட்டுக்கு காவல்துறையினர் குவிந்துள்ளனர். ஆனால், அவர் வீட்டை உள்ளுக்குள் பூட்டிக்கொண்டு மூன்று மணி நேரம் உள்ளேயே இருக்கிறார். கதைவை உடைத்து வீட்டுக்குள் செல்ல விருதுநகர் மாவட்ட ஏ.எஸ்.பி.மதி, அருப்புக்கோட்டை டி.எஸ்.பி தனபால் தாசில்தாரிடம் ஆலோசித்து வருகிறார்கள். அருப்புக்கோட்டையில் இதனால் பதற்றமாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!