அமெரிக்கா, கனடா மன்றங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் - ரஜினி அடுத்த அதிரடி!

அமெரிக்கா மற்றும் கனடா மன்றங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து, நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்

அரசியல் அறிவிப்புக்குப் பின்னர், நடிகர் ரஜினிகாந்த்தின் செயல்பாடுகள் தீவிரமடைந்துவருகின்றன. மன்ற நிர்வாகிகளை நியமிப்பது, அவர்களுடன் வீடியோ கான்ஃபெரன்ஸிங்கில் உரையாடுவது என அவரது நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. அதே வேளை, ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவிப்பது என பிசியாகிவிட்டார் ரஜினி. அதற்கு உதாரணம்தான், சமீபத்தில் நடந்த ஐபிஎல்-க்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் தாக்கப்பட்டது தொடர்பாகக் கருத்து தெரிவித்தது. இது தொடர்பாக அவருக்கு எதிர்வினைகள் கிளம்பத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் ஒருபுறம் நடந்துவரும் அதே வேளை, வெளிநாடுகளுக்கான மன்ற நிர்வாகிகளை நியமித்து ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கான ரஜினி மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை தலைமை நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ளார். கனடா மற்றும் அமெரிக்க ரஜினி மன்றச் செயலாளராக எம்.ஆர்.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைச் செயலாளராக ரமேஷ்குமார் மற்றும் கோபால் ஸ்ரீநிவாசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, மகளிர் குழு, ஐ.டி விங் எனப் பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள  நிர்வாகிகளுக்கு, அனைத்து மன்ற நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!