வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (16/04/2018)

கடைசி தொடர்பு:18:21 (16/04/2018)

`எந்த மேலிடத்துக்காக இந்த ஈனச்செயல்' - நிர்மலா தேவிக்கு எதிராகக் கொந்தளித்த ஸ்டாலின்..!

'எந்த மேலிடத்துக்காக நிர்மலா தேவி இந்த ஈனச்செயலில் ஈடுபட்டார்' என மு.க.ஸ்டாலின் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைக்க முயன்ற ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரத்தில், நிர்மலா தேவிக்கு எதிராகக் கல்லூரியை முற்றுகையிட்டுப் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இதற்கிடையே, அவர்மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து,  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அவரைக் கைதுசெய்ய முயன்றுவருகின்றனர். ஆனால் நிர்மலா தேவி, 3 மணி நேரத்துக்கும் மேலாக வீட்டைப் பூட்டிவிட்டு உள்ளேயே இருக்கிறார். இதனால், வருவாய்த்துறையினரின் ஒப்புதலுக்காக போலீஸார் காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், 'எந்த மேலிடத்துக்காக நிர்மலா தேவி இந்த ஈனச்செயலில் ஈடுபட்டார்' என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.  அதில், ``கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச்செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, கடும் கண்டனத்துக்குரியது. அவரை உடனடியாகக் கைதுசெய்து, எந்த 'மேலிடத்திற்காக' இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்ற வேண்டும்.

கல்வியைப் போதிக்கவேண்டிய பேராசிரியர் ஒருவரே, கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்னையில், வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க