Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இன்ஜினீயர், மருத்துவர், காவல்துறை அதிகாரி.. போராடி எங்க உரிமையைப் பெற்ற கதை தெரியுமா..?' - நாடகத்தில் அசத்திய திருநங்கைகள்

தேசிய திருநங்கையர் தினத்தைக் கொண்டாடும் வகையில், 'சண்டைக்காரி' என்னும் நாடகம் பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டி திருநங்கைகளால் நடத்தப்படுவதை அறிந்து, மாலை நேரக் காற்றை மகிழ்வாகச் சுவாசித்தபடி சென்றேன். கூடியிருந்த கூட்டத்தில் ஒருத்தியாக ஐக்கியமானேன்.

திருநங்கைகள்

டிரான்ஸ் நைட்ஸ் நவ் கலெக்டிவ் (Trans rights now collective) என்கிற அமைப்பும், கட்டியக்காரி நாடக குழுவும் இணைந்து நடத்திய நிகழ்ச்சி, 'சண்டைக்காரி'. ஶ்ரீஜித் சுந்தரம் என்பவர், நாடகத்தின் இயக்குநர். இந்த நாடகத்துக்குப் பின்னாலிருந்து உதவிபுரிந்த நல்உள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்து, ஒரு துண்டு சீட்டு விநியோகிக்கப்பட்டது. கூட்டத்தின் நடுவில் அந்தப் பிரசுரத்தை வாசித்துக்கொண்டிருந்தார்கள். ஏழு மணிக்கு அலைகள் ஆர்ப்பரிக்க, நிகழ்ச்சி ஆரம்பமானது. கட்டியக்காரி குழுவைச் சேர்ந்த மங்கை, 'சண்டைக்காரிகளை' வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

 

ரு பக்கம் பறை முழங்க, கம்பீரமான குரலில் திருநங்கைகள் அனு, கிரேஸ் பானு, கயல்விழி, நேகா, ரேணுகா, செளமியா மேடை ஏறினார்கள். ''சண்டைக்காரி என்றால், கோபக்காரியாக, வெட்டியாக அனைவரிடமும் வம்பு இழுப்பவர்களையே பார்த்திருப்பீங்க. உரிமைக்காகச் சண்டைப் போட்டவங்களைப் பார்த்திருக்கீங்களா? நாங்க எங்க உரிமைக்காகச் சண்டைப் போட்டதே இந்தச் 'சண்டைக்காரி' நாடகம் மூலமா எடுத்துச் சொல்லப்போறோம்''னு தொடங்கினாங்க.

 

ள்ளியிலிருந்து ஒதுக்கப்பட்டு, போராடி தங்களுடைய உரிமையைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தும், தான் விரும்பிய மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்க முடியாமல், திருநங்கை என்கிற ஒரே காரணத்தால் புறக்கணிக்கப்பட்ட தாரிகா பானு, கோர்ட்டில் போராடி உரிமையைப் பெற்ற கதை.

திருநங்கை

 

பெற்றோர்களைப் புறக்கணித்துவிட்டு, லட்சியத்துக்காகப் போராடியவர் பிரித்திகா யாஷினி. காவல் துறையில் பணிக்கு சேரும் கனவுடன் தினசரி கடுமையான உடற்பயிற்சி, எழுத்துத் தேர்வு ஆகியவற்றை மேற்கொண்டும் பாலினத்தை காரணம் காட்டி அவர் ஒதுக்கப்படுகிறார். நீதிமன்றத்தில் தன் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி, எழுத்துத் தேர்வில் தேர்வாகியும், உடல் தகுதி தேர்வில் தவறான கணிப்பால் புறக்கணிக்கப்படுகிறார். மீண்டும் தன்னுடைய போராட்டத்தையே துணையாக்கி, இன்று காவல்துறை அதிகாரியாக வலம்வரும் கதை.

 

குடும்பத்தின் புறக்கணிப்பு, பள்ளியில் கேலி ஆகியவற்றைக் கடந்து, தன்னுடைய விடாமுயற்சியால் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி என்கிற பெருமையைப் பெற்றுள்ள கிரேஸ் பானுவின் கதை... பாலியல் தொழிலுக்கு தங்களுடைய விருப்பமே இல்லாமல் தள்ளப்பட்ட திருநங்கைகளின் கதை... வெட்டியான் வேலையைப் பெருமையா நினைக்கும் திருநங்கையை, அரசு அதிகாரியாக மாற்ற கிரேஸ் பானு எடுத்த முயற்சி  பற்றிய கதை... என ஒவ்வொரு கதையையும் எதார்த்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் பதிவுசெய்தார்கள். 

 

வ்வொரு நாடகத்தின் இடையிலும், 'எங்களுடைய உரிமையைத் தருவதற்கு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறீர்கள்? நாங்களும் குடிமக்களுக்கான வரியைக் கொடுக்கிறோமே' என்ற அவர்களின் கேள்விக்கு நம்மிடம் மெளனம் மட்டுமே பதிலாக இருந்தது.

 

``நாங்க கர்ப்பிணியை எட்டி மிதிச்சு கொலை செய்தோமா? அல்லது எட்டு வயசு குழந்தையைப் பலாத்காரம் செய்து கொன்றோமா? அடுத்தவங்க குடியைக் கெடுத்தோமா? இது எதுவுமே பண்ணாத எங்களை, நீங்க தீண்டத்தகாதவங்களா பார்க்கிறது நியாயமா? நாங்கதான் உங்களை தீண்டத்தகாதவங்களாகப் பார்க்கணும்'' என ஆணி அடித்ததுபோல மனதில் பதியவைத்தார்கள். நாடகம் முடிந்ததும் எழுந்த கரகோஷத்தில் கடல் அலையின் சப்தம் அடங்கிவிட்டது.

 

திருநங்கை

`சண்டைக்காரி' நாடகத்தின் இயக்குநர் ஶ்ரீஜித் சுந்தரம், ``இது அவர்களுடைய கதை. அவர்களுடைய வலி. அவர்களே தனிப்பட்ட கதையை எழுதினாங்க. அவற்றைக் கோவையாக்கியது மட்டுமே என் வேலை. இந்த நாடகத்தில் நடிச்ச ஒவ்வொருத்தருக்கு பின்னாடியும் அத்தனை வலிகள் இருக்கு. இனியாவது திருநங்கைகளுக்கான உரிமைகளை அரசு சரியாக வழங்கணும்'' என்றார்.

 

றுதியாகப் பேசிய கிரேஸ் பானு, ``இது எங்களுடைய கதை. அதை ஒன்றாகச் சேர்த்து இந்த மேடையில் காட்டினோம். தேசிய திருநங்கையர் தினத்தை சந்தோஷமா கொண்டாடணும்னு நினைச்சுத்தான் இதை ஏற்பாடு பண்ணினோம். நாங்க ஒவ்வொருத்தரும் இப்போவரை எங்க உரிமைக்காகப் போராடிட்டிருக்கோம். எங்கேயெல்லாம் எங்களின் திறமையும் உரிமையும் மறுக்கப்படுகிறதோ, அங்கேயெல்லாம் இந்தச் 'சண்டைக்காரி'கள் தொடர்ந்து போராடுவார்கள்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement