வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (16/04/2018)

கடைசி தொடர்பு:23:30 (16/04/2018)

வழக்கறிஞர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - அம்பத்தூரை பதறவைத்த மர்மக் கும்பல்!

சென்னை அம்பத்தூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சென்னை  ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர், ரவிச்சந்திரன் என்கிற கதிர்நிலவன். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். இவரது அலுவலகம், அம்பத்தூர் காவல் நிலையம் அருகே காமராஜபுரம் ஜெ.ஜெ.தெருவில் உள்ளது. இன்று, வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தத்துக்கு  எதிரான ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொண்டார். 

பின்னர், அடையாளம் தெரியாத நபரால் அவரது அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசப்பட்டுள்ளது. திடீரென சத்தம் கேட்ட நிலையில் அலுவலத்தின் உள்ளே பணியாற்றிவரும் உதவியாளர் அழகு என்பவர் சென்று பார்த்தபோது, பாட்டில் கண்ணாடி, அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் படத்தில் பட்டு சிதறியுள்ளது. அதில், அம்பேத்கர் படம் சேதமடைந்திருந்தது. பின்னர், கட்சி நிர்வாகிகள் அளித்த தகவலின் பேரில், அம்பத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.