வெளியிடப்பட்ட நேரம்: 23:59 (16/04/2018)

கடைசி தொடர்பு:08:45 (17/04/2018)

சுனில் நரைன், குல்தீப் சுழலில் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது டெல்லி டேர்டெவில்ஸ்! #KKRvsDD

ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 

 ஐபிஎல் 2018 தொடரின் 13 -வது லீக் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

டெல்லி டேர்டெவில்ஸ்

Photo: Twitter/IPL

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரஸல், 12 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உதவியுடன் 41 ரன்கள் குவித்தார். ரஸலுடன் இணைந்த நிதிஷ் ராணா அரை சதம் அடித்தார். அவர், 35 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி சார்பாக ட்ரண்ட் போல்ட் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர், தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்நிலையில், 20 ஓவரில் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கம்பீர் மற்றும் ஜாய் ஆகியோர், சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் ஐயரும் ஒரு பவுண்டரியோடு பெவிலியன் திரும்பினார். 24 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த டெல்லி அணியை ரிஷப் பாண்ட்டும் மேக்ஸ்வெல்லும் அதிரடி ஆட்டத்தால் சரிவில் இருந்து மேலே கொண்டுவந்தனர். 43 ரன்களில் பாண்ட் ஆட்டமிழக்க, அடுத்த சில ஓவர்களிலேயே மேக்ஸ்வெல்லும் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரது விக்கெட்டுகளும் சீட்டுக்கட்டுகளைப் போல அடுத்தடுத்து சரிந்தன. இறுதியில், 129 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது டெல்லி அணி. கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆக, 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றிபெற்றது. நிதிஷ் ராணா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க