Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு ஜூன் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு !

Madurai: 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கை ஜூன் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், '2016 அக்டோபர் 24-ம் தேதி முதல் உள்ளாட்சிப் பதவிகள் காலியாக உள்ளன. ஆகவே, எனது மனுவை பரிசீலித்து தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.  இந்த வழக்கு,  நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால், அவ்வழக்கு தொடர்பாகக் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement