Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார் கவுன்சில் செயலாளர்களிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்..!

Madurai: 

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த இருளப்பன், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் அளித்த மனுவில், 'நான் 1976-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பழைய எஸ்.எஸ்.எல்.சி, அதன்பின் ஐ.டி.ஐ படித்தேன். அதன் பிறகு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு படித்து முடித்தேன். பிறகு, மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பு படித்து முடித்தேன். அதன்பின் அரசுப் பணியில் இருந்தேன். தற்போது, நான் வழக்கறிஞர் தொழில் செய்வதற்காக தமிழ்நாடு பார் கவுன்சிலில் விண்ணப்பம் செய்தேன். அவர்கள் என் பதிவை ஏற்க மறுத்துவிட்டனர். ஐ.டி.ஐ படிப்பு, +2 வுக்கு இணையானது என உயர்கல்வித் துறை அரசாணை உள்ளது. எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எனது விண்ணப்பத்தை ஏற்று பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பார் கவுன்சில் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், இதுபோன்ற ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முழு அமர்வில் நிலுவையில் உள்ளது எனக் கூறினர். இதையடுத்து நீதிபதிகள், இந்திய பார் கவுன்சில் செயலர், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement