வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (17/04/2018)

கடைசி தொடர்பு:10:51 (17/04/2018)

ஆளுநர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன்? - நிர்மலா தேவி விவகாரத்தில் ஸ்டாலின் சந்தேகம்

'உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில், உயர் நீதிமன்றம் மேற்பார்வையில், சி.பி.ஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும்' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தீரன் சின்னமலையின் 262-வது பிறந்தநாள், அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில், உயர் நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும்.

 

பல்கலைக்கழகத் துணைவேந்தர்தான், மாணவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் விசாரணை செய்கிறார். இது ஏன் என்று தெரியவில்லை. பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் குழப்பமாக உள்ளது'' என்று தெரிவித்தார்.