வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (17/04/2018)

கடைசி தொடர்பு:17:15 (17/04/2018)

பெர்னோலி தியரியின்  அடிப்படையை அறிவீர்களா? - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

பெர்னோலி தியரியின்  அடிப்படையை அறிவீர்களா? - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

 

முதன்மைத் தேர்வு

அறிவியல் பாடங்களைப் பொறுத்தவரையில் யு.பி.எஸ்.சி தேர்வைவிட டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலேயே அதிகமான கேள்விகள் இடம்பெறுகின்றன. TNPSC தேர்வுகளில் பலமுறை நேரடி கேள்விகளாகவும் பாடங்களின் மீதான நம் புரிதலை மட்டும் வைத்து எளிதாக பதிலளிக்கக்கூடியதாகவும் அமைகின்றன. UPSC தேர்வுகளைப் பொறுத்தவரையில் நம் புரிதலையும் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் அன்றாட அறிவியல் நிகழ்வுகளைப் பற்றியுமே பெரும்பாலான கேள்விகள் அமைகின்றன. இயற்பியல் பாடங்களைச் சார்ந்து UPSC முதன்மைத் தேர்வுகளில் 1-2 கேள்விகளை எதிர்பார்க்கலாம். அதிகபட்சமாக நான்கு கேள்விகள் வரை இடம்பெற்றிருக்கின்றன. ஆக, ரொம்பவும் மெனக்கெட்டு ஆராய்ச்சியெல்லாம் செய்யாமல் முக்கிய கான்செப்ட்டுகளைத் தெரிந்துகொண்டால் போதும். 

முதலில் அனைத்து முக்கிய யூனிட்களையும் (SI system, MKS system போன்ற) தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு  மெக்கானிக்ஸ் (mechanics) பாடங்களில் ஸ்பீடு (speed), திசைவேகம் (velocity), முடுக்கம் (Acceleration), உராய்வு ( Friction), இம்பல்ஸ் (Impulse), டார்க் (torque), வேலை (work), திறன் (power), ஆற்றல் (energy) சார்ந்த முக்கியக் கூறுகள், புவிஈர்ப்பு (gravitation), மையநோக்கு மற்றும் மையவிலக்கு விசை (centripetal and centrifugal forces) போன்றவற்றின் அடிப்படை விஷயங்களையும் இவற்றின் மூலம் இயங்கும் முக்கியக் கருவிகளையும் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல், நியூட்டனின் விதிகள், கெப்லர் விதிகள், பாஸ்கல் விதி, ஆர்க்கிமிடீஸ் தத்துவம் போன்ற ஆராய்ச்சியாளர்களின் பெயர்கொண்ட விதிகள் அனைத்தையும் ஒரு பட்டியல்  அமைத்துப் படித்துக்கொள்ளுங்கள். பள்ளி, கல்லூரிகளில் படிப்பதுபோல் முழுமையாக ` is ' , `was ' எல்லாம்கூட விடாமல் மனப்பாடம்  செய்யத் தேவையில்லை. விதிகளின் அடிப்படைப் பொருளையும் முக்கிய அம்சத்தையும் மட்டும் தெரிந்துகொண்டாலே போதுமானது.

 

உதாரணக் கேள்வி: 

பெர்னோலி தேற்றத்தைப் (Bernoulli's Theorem) பொறுத்தவரை இவற்றில் எவை சரி?

விமானம் பறத்தல் ( Air flight )

கிரிக்கெட் பந்தின் சுழற்சி 

பேருந்து நகர்தல்

 

1 only 

1 and 3 

2 and 3 

1and 2 ( பதில் ) 

அடுத்ததாக, ஒலி (sound), அலை (wave), அலைவு (oscillation) ஆகிய தலைப்புகளில் முக்கியமான மின்காந்த அலைகள் ( Electromagnetic waves ) - அல்ட்ரா வயலெட் ( UV rays ), எக்ஸ் ரே (x ray) , இன்ஃப்ரா ரெட் அலைகள் ( Infra red rays ) மற்றும் அவை முக்கியமாகப் பயன்படுத்தப்படும் கருவிகள் / இடங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். இன்டர்ஃபெரன்ஸ் ( Interference), ரிஃப்ராக்‌ஷன் (Refraction), டாப்லர் எஃபெக்ட் (Doppler effect ) போன்ற பகுதிகள் முக்கியம். அதேபோல், வெப்பம் (Heat) மற்றும்  வெப்ப இயக்கவியல் (Thermodynamics) ஆகியவற்றின் முக்கிய அளவுகோல்கள், தெர்மோமீட்டர், வெப்ப விரிவாக்கம் (Thermal expansion), வெப்ப இயக்கவியலின் விதிகள் அதன் நடைமுறை விளக்கங்கள், வெப்ப இயந்திரங்கள் (Heat engines), ஆவியாதல் (evaporation), குளிர்பதன (refrigeration), வெப்ப பரிமாற்றம் (Heat transmission), வெப்ப விதிகளை பொறுத்தவரை நியூட்டனின் கூலிங் விதி, கார்னாட் விதி (carnots law), கிர்காஃப்ஸ் விதி ( kirchoff’s law ), ஸ்டீபனின் விதி (stefans law) ஆகியவற்றைப்  படித்துக்கொள்ளுங்கள். 

ஒளி (light) மற்றும்  அலை ஒளியியல் (wave optics) பகுதியில் கிரகணங்கள் (eclipse), பிரதிபலித்தல் (reflection) விதிகள், கண்ணாடி (mirror) மற்றும் அதன் வகைகள் (உதாரணங்களுடன்), ஒளிச்சிதறல் (light scattering), முப்பட்டைக் கண்ணாடி (prism), ஆப்டிக்கல் கருவிகள் (கேமரா, மைக்ரோஸ்கோப் போன்றவை), விதிகளைப் பொறுத்தவரை மேக்ஸ்வெல் மின்காந்த தியரி (Maxwell electromagnetic theory), டாப்லர் எஃபெக்ட் (Doppler effect), முனைவாக்கம் (polarisation) போன்றவற்றைத் தெரிந்துகொள்வது அவசியம்.

மின்சாரம் மற்றும் காந்த விசைப் பகுதிகளில் நாம் மின்னேற்றம் (electric charge), மின்திறன் (electric potential), கூலூம்பின் விதி (Coulomb’s law), மின்சார இருமுனையம் (electric dipole), மின்னோட்டம் (electric current) அதன் வகைகள், பயன்பாடுகள், ஓம்மின் விதி (ohms law), பல்வேறு மின்கருவிகள் மற்றும் அவற்றின் அன்றாட பயன்பாடுகள் ஆகியவற்றைப் படித்துக்கொள்ளுங்கள் (அம்மீட்டர், வோல்ட்மீட்டர், கால்வனோமீட்டர், இன்வர்டர், பல்வேறு விளக்கு வகைகள், கிர்காஃப்ஸ் விதி (Kirchhoff’s law), ஃபாரடேவின் விதி (faraday’s law), காந்தம், காந்த சக்தி வாய்ந்த பொருள்கள், காந்தப்பெருக்கு (magnetic flux), காந்தப்புலம் (magnetic field), கியூரியின் விதி (curie’s law), மின்மாற்றி (transformer) ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். 

இதுதவிர, ஒளிமின் விளைவு (photoelectric effect), அணு (atom) அதன் அம்சங்கள், பல்வேறு பகுதிகள், மாதிரிகள், அதைச் சார்ந்த பல்வேறு கருவிகள், அணுசக்தி, அணுப் பிளப்பு ( nuclear fission ), அணு இணைவு (nuclear fusion) இவற்றின் பயன்பாடுகள் மற்றும் உதாரணங்கள், கதிரியக்கம் (radioactivity), பல்வேறு மின்னணு இயந்திரங்கள் (லேசர் ( laser ) உள்ளிட்ட) பற்றித் தெரிந்துகொள்வது நம் தேர்வுகளுக்கு மிக அவசியம். 

உதாரணக் கேள்வி ( UPSC 2007): 

இவற்றின் எந்த அலை வகைகள் CT (computerised tomography) ஸ்கேனில் நம் உடலின் உள்ளுறுப்புகளைக் காட்சிப்படுத்த உதவுகிறது?

எக்ஸ் ரே ( x ray ) ( பதில் ) 

ஒலி அலைகள் ( sound waves ) 

காந்த அதிர்வு ( Magenetic resonance imaging- MRI )

ரேடியோ ஐஸோடோப்கள் ( radio isotopes ) 

முதன்மைத் தேர்வு

மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் கடகடவென ஒரு பார்வை பார்த்து (சுமார் 10 பக்கங்களுக்குள்) குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். தேர்வுகளுக்கு முன் அவற்றை மட்டும் நன்றாகப் படித்து, தேர்வில் அசத்துங்கள். அதைவிட அதிகமாகவும் ஆழமாகவும் படிக்க வேண்டும் என நினைத்து, தேர்வு நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

 

- மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கலாம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்