வெளியிடப்பட்ட நேரம்: 13:54 (17/04/2018)

கடைசி தொடர்பு:14:03 (17/04/2018)

கைப்பற்றப்பட்டது நிர்மலா தேவியின் செல்போன்! அதிர்ச்சியடைந்த போலீஸ்

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் வழிநடத்த முயற்சித்த கணிதத்துறை உதவிப்பேராசிரியர் நிர்மலாதேவியை காவல்துறை நேற்று இரவு அவரது வீட்டில் கைது செய்துள்ளது.

நிர்மலாதேவி

உயர் கல்வித்துறை அதிகாரிகள், பெரிய அரசியல் புள்ளிகள் பலரின் தொடர்புள்ள நிர்மலாதேவியிடம் மிகவும் கனிவான முறையில் விருதுநகர் மாவட்ட காவல்துறை சிறப்பு பிரிவு நேற்று இரவு முதல்  விசாரணை நடத்தி வருகிறது.  இதுவரை வாயைத்திறந்து பேச மறுத்து வருகிறார் நிர்மலாதேவி.   `தான் சாதாரணமாக பேசியதைத் தப்பான அர்த்தத்தில் சிலர் பரப்பிவிட்டார்கள்’ என்று மட்டும் சொல்லி வருகிறாராம். இதில் முக்கிய ஆதாரமாக அவருடைய இரண்டு செல்போன்களை கைப்பற்றியுள்ளது போலீஸ். அதில் பல முக்கிய புள்ளிகளின் அலைப்பேசி எண்களும், கேலரியில் பல வி.ஐ.பிக்கள், கல்லூரி மாணவிகளின் படங்களும் இருந்ததால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தப் போனிலுள்ள ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மாணவர் தரப்பில் கூறப்படுகிறது. நிர்மலாதேவியிடம் நடத்தப்படும் விசாரணையை வீடியோவில் பதிவு செய்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க