சித்தர் கோயிலில் நடந்த திருக்கல்யாண உற்சவம்! தென்னம்பாக்கம் கிராமத்தில் குவிந்த பக்தர்கள்

திருக்கல்யாணத்தில் 300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில் இசைகலைஞர்கள் எந்த ஒரு பிரதி பலனும் எதிர்பார்க்காமல் கடவுளுக்காக மட்டுமே இசைக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது

கடலூர் அருகே பழைமை வாய்ந்த அழகர் சித்தர் கோயில் சித்திரை திருவிழாவில் 300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில் இசை 
கலைஞர்களின் மேளதாளம் முழங்க நடைபெற்ற திருகல்யாணம் வைபோகத்தில் புதுச்சேரி மற்றும் தமிழக பக்தர்கள் 
பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்னம்பாக்கம் கிராமத்தில் குவிந்த  பக்தர்கள்

புதுச்சேரி - கடலூர் எல்லை பகுதியான தென்னம்பாக்கம் கிராமத்தில் உள்ள அழகுமுத்து அய்யனார் சித்தர் கோயிலில்   சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்தது. திருமண வரன், குழந்தைப் பாக்கியம் உட்பட பல வேண்டுதலுக்கு சிமென்ட்  பொம்மைகளை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்கெனவே பொம்மைகள் செய்து வைத்தவர்கள், அவற்றை புதுப்பித்து வழிபட்டனர். 

மேலும், கோயிலில் அய்யனார் மற்றும் பொற்கலை, பூரணி ஆகியோர் திருக்கல்யாணத்தில் 300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில்  இசைக்கலைஞர்கள் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கடவுளுக்காக மட்டுமே இசைக்க பல்லாயிரக்கணக்கான மக்கள்  முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது 

இதில் புதுச்சேரி மற்றும் தமிழக பக்தர்கள் பல்லாயிரக்கணக்காணோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், அழகர் கோயிலின் பின்புறம் அழகர் சித்தர் கோயில் உள்ளது. 366 ஆண்டுக்கு முன்பு இக்கிராமத்துக்கு வந்த சித்தர், இப்பகுதி மக்களின் நோய்களைக் குணமாக்கியுள்ளார். இவர் அங்குள்ள கிணற்றில் சமாதி அடைந்துள்ளார். அக்கிணற்றின் மேல்  சித்தருக்கு அமைத்துள்ள சிறிய கோயிலில், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!