வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (17/04/2018)

கடைசி தொடர்பு:18:15 (30/06/2018)

`இதைச் செய்யுங்கள் மக்களே' - விவசாயியின் அட்சயதிருதியை வேண்டுகோள்

"அட்சயதிருதியையான நாளை தண்ணீர் வளம் பெருகவும் விவசாய வளம் பெருகவும் தண்ணீரையும் தானியங்களையும் வைத்து பூஜை செய்யுங்கள்" என்ற புதுவித யோசனையை முன்வைக்கிறார் விவசாயி ஒருவர்.

விவசாயியின் அட்சயதிருதியை வேண்டுகோள்

புதுக்கோட்டை மாவட்டம், சேந்தங்குடியைச் சேர்ந்த பாரம்பர்ய விவசாயி தங்க.கண்ணன். இவர் அட்சயதிருதியைப்பற்றி விவரித்துவிட்டு வித்தியாசமான, புது யோசனையை மக்களுக்கு சொல்கிறார். "நாளை நாடெங்கும் அட்சயதிருதியைக் கொண்டாடப்படுகிறது. நகைக்கடைகள் அலைமோதும் கூட்டத்தால் நிரம்பி வழியும். இன்று தங்கம் வாங்கினால் தங்கம் சேரும் என்ற மக்களின் நம்பிக்கையைத் தங்களது விற்பனைக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவிட்டன நகைக் கடைகள். எல்லா பண்­டி­கை­களைக் காட்­டி­லும் பல மடங்கு யோக­மும் புண்­ணி­ய­மும், பொன்­னும் பொரு­ளும் அட்­ச­ய­மாய் வளர செய்­வது அட்சயதிருதியை என்ற பெரும் நம்பிக்கை கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது.

அட்­ச­யம் என்­றால் வள­ரு­தல் நிறை என்று பொருள். அட்­சயதிரு­தியை தினத்­தன்று அதி­கா­லை­யில் எழுந்து நீராடி புத்­தாடை உடுத்தி அட்சய புதிய நகை­கள், ஆடை­கள் ஆகி­யவை வாங்கி பூஜை செய்­வ­தால் பொன் பொருள் வளர்ந்து அமோக நன்­மை­கள் வள­ரும். அட்­சய திரு­தி­யையை முன்­னிட்டு செய்­யக்­கூ­டிய தானங்­கள், பித்ரு காரி­யங்­க­ளுக்கு பல­ம­டங்கு பலன்­கள், புண்­ணி­யங்­கள், நன்­மை­கள்
உண்­டாகும். அட்­சய திரு­தியை அன்று ஏழை­க­ளுக்கு ஆடை­கள் தானம் செய்­வ­தால் உடல் ஆரோக்­கி­யம்
ஏற்­பட்டு தீராப்­பி­ணி­கள் தீரும். அன்­ன­தா­னம் செய்­தால் அகால மர­ணம் அகன்று ஆயுள் கூடும். நீர்­மோர் தானம் செய்­தால் மனக்­கஷ்­டங்­கள் வில­கும். குடும்ப உற­வு­கள் உடன் மூத்­த­வர்­க­ளின் காலில் விழுந்து
ஆசிபெற்று பாசத்தை­யும் அன்­பை­யும் பெறுங்­கள்.

இந்த வழக்கமான காரியங்களையெல்லாம் செய்துவிட்டு கூடவே, மற்றொரு காரியத்தையும் செய்யும்படி மக்களை  கேட்டுக்கொள்கிறேன். அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதிகம். தங்கம், வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், இன்றைய உடனடி தேவை என்பது தண்ணீர். ஆறுகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் என்று எல்லாநீர்நிலைகளும் வறண்டும் கிடக்கின்றன. எனவே, அட்சய திரிதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு சொம்பு நிறைய தண்ணீரை இறைவன் முன்பு வைத்து நமக்கு குறைவில்லாத தண்ணீர் செல்வத்தை வழங்குமாறு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், நமது நாட்டில் விவசாயம் செழிக்கவும் தானியங்களையும் வைத்து இறைவனை வழிபடுங்கள். அட்சயை திருதியை அன்று தங்கம் வைத்து பூஜை செய்தால் தங்கம் பெருகும் என்றால், தண்ணீரையும் தானியங்களையும் வைத்து பூஜை செய்வதால், அதுவும் பெருகும்தானே. இது சரியான முறை என்று நினைத்தால் தெரிந்தவர்களிடம் கூறி, அவர்களையும் ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்ய சொல்லுங்கள். நீரின்றி அமையாது உலகு. அட்சய திருதியை முன்னிட்டு நீர் நிலைகள் உயர வேண்டும்; நாட்டு  உணவு தானியங்கள் பெருக வேண்டும் என்று இறைவனை வேண்டி  கும்பிடுங்கள். ஆண்டுக்காண்டு பெருகி அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் ஐந்து அடியில் கிடைக்க பிரார்த்தனை செய்வோம். அட்­சய திரு­தியைக் கொண்­டா­டுங்­கள். ஆனந்­த­மாக இருங்­கள்" என்றார்.