எம்.எல்.ஏ-வின் ஆபாசப் பேச்சால் அதிர்ந்துபோன அதிமுக ஒன்றியச் செயலாளர்!

முருகுமாறன் எம்.எல்.ஏ, புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியனை செல்போனில் தொடர்-பு கொண்டு இது குறித்து மிக ஆபசமாக பேசியுள்ளார். இந்த ஆடியோ இன்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கடலூர் பகுதியில் சமூக வளைத்தலங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பேனரில் தனக்கு முக்கியத்துவம் அளிக்காத கட்சி நிர்வாகி ஒருவரை காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன் ஆபாசமாகத் திட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.  

எம்.எல்.ஏ-வின் ஆபாசப் பேச்சால் அதிர்ந்துபோன அதிமுக ஒன்றிய செயலாளர்!

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.கவைச் சேர்ந்த முருகுமாறன் இருந்து வருகிறார். இவர் அ.தி.மு.க மாநில அமைப்புச் செயலாளராகவும் உள்ளார். நேற்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
நடந்தது. இதில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத், அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், சிதம்பரம் பாண்டியன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   

இந்த விழாவிற்காக சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியில் ஏராளமான வரவேற்பு ஃபிளெக்ஸ் பேனர்களைக் கட்சியினர் வைத்திருந்தனர். இதில் புவனகிரி ஒன்றிய இளைஞரணிச் செயலாளரான செழியன் என்பவர் வைத்திருந்த பேனரில் கட்சி அமைப்புச் செயலாளரான முருகுமாறனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அவரது புகைப்படத்தைக் கடைசியாகப் போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முருகுமாறன், புவனகிரி ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் செழியனை, செல்போனில் தொடர்பு கொண்டு கடுமையாகப் பேசியுள்ளார். மேலும், செழியனை அவர் ஆபாச வார்த்தைகளிலும் திட்டியுள்ளார். இந்த ஆடியோ இன்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கடலூர் பகுதிகளில் பரவியது. சமூக வலைதளங்களில் அந்த ஆடியோ வைரலாகப் பரவி வருகிறது. அதிமுக எம்.எல்.ஏ-வும், கட்சியின் அமைப்புச் செயலாளராக உள்ள ஒருவர், கட்சி நிர்வாகியை ஆபாசமாகத் திட்டியுள்ள சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!