வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (17/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (17/04/2018)

`முக்கிய நபர்களுக்குத் தொடர்பு' - நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ விசாரிக்கக்கோரி மனு!

நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நிர்மலா தேவி

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைக்க முயன்ற விவகாரத்தில் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி மீதான பிடி இறுகுகிறது. கல்லூரி சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அவரை ஏற்கெனவே கைது செய்துள்ளார் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், ஆளுநர் சார்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வழக்கின் முக்கியத்துவம் கருதி, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.மணி என்பவர் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் பல்வேறு முக்கிய நபர்களுக்குத் தொடர்பிருக்கிறது என அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க