கொள்ளையடித்தால் குண்டாஸ்.. துணை போனால் ஒழுங்கு நடவடிக்கை.. நொய்யலைக் காக்க கிடுக்குப்பிடி!

நொய்யல் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நொய்யல் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நொய்யல்

நொய்யல் ஆற்றில் மணல் கொள்ளை இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நமது இணையதளத்திலும் தொடர்ந்து செய்திகள் பதிந்து வருகிறோம். குறிப்பாக, நொய்யல் ஆற்றில், மணல் திருடுவதற்காக, போலீஸாருக்கு 2,000 ரூபாய் தருகிறோம் எனக் கொள்ளையர்கள் கூறிய வீடியோ பதிவை, கடந்த 13-ம் தேதி பதிவு செய்தோம். மேலும், இதுகுறித்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருந்தோம்.

இதையடுத்து, மணல் கொள்ளையர்கள் மீதும், அதற்கு துணை நிற்கும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நொய்யலில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது, குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், நடவடிக்கை எடுக்கத் தவறும் போலீஸார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, இதுபோன்ற சட்ட விரோதச் செயல்கள் குறித்து 94458-46282 என்ற எண்ணுக்கு அழைத்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!