வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (17/04/2018)

கடைசி தொடர்பு:21:30 (17/04/2018)

`ரிசல்ட் வெளியிட மாட்டோம்' - மெட்ரிக் பள்ளிகளை எச்சரிக்கும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை!

விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படமாட்டாது என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்டன. வரும் மே 16-ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகளும், மே 30-ம் தேதி பிளஸ் ஒன் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மே 23-ம் தேதி, 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுமுடிவு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படமாட்டாது என அரசுத்தேர்வு துறை இயக்குநர் வசுந்தராதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ``விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாமல் மெட்ரிகுலேசன் பள்ளிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இதனால் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியானது ஆசிரியர்களின் தார்மிக கடமை. அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர்களும் உடனடியாக ஆசியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பாத பள்ளிகளின் தேர்வு முடிவுகள் கண்டிப்பாக வெளியிடப்படமாட்டாது" எனத் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க