`கள்ளழகர் வருகையை மொபைலிலேயே கண்டுபிடிக்கலாம்' - காவல்துறையின் புதிய வசதி அறிமுகம்!

சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர், எந்த இடத்தில் இருக்கிறார், எங்கே இருந்து அருள்பாலிக்கிறார் என்பதை அறிந்துகொள்ள டிராக் வசதியுடன் கண்டுபிடிக்க அப்ளிகேஷனை மதுரை காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர். ஏற்கெனவே இருந்த காவலன் `ஆப்'  உதவியுடன் இதில் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது.  

மதுரை சித்திரைத் திருவிழா, மீனாட்சியம்மன் கோயில் கொடியேற்றத்திலிருந்து நாளை தொடங்கவிருக்கிறது. இவ்விழாவின் மிக முக்கிய அம்சமான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் எதிர்சேவை நிகழ்ச்சி ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கவுள்ளனர். வீர ராகவ பெருமாள் முன்னும், பின்னும் மும்முறை வரவேற்புடன் அழைத்து அழகரிடம் முதல்மரியாதை பெறுவார். இதற்காக ஏப்ரல் 28-ம் தேதி அழகர்கோயிலிலிருந்து கள்ளழகர் புறப்பாடாகி, மதுரை வருகிறார். 29-ம் தேதி மதுரை வந்து, 30-ம் தேதி வைகையாற்றில் எதிர் சேவை செய்து, மே 1-ம் தேதி ராமராயர் மண்டபகப்படியில் தசாவதாரமும், மே 2-ம் தேதி பூப்பல்லக்கும், மே.4-ம் தேதி மீண்டும் அழகர் மலையையும் வந்தடைகிறார். 

கள்ளழகர்

இந்த நிகழ்வுகளில் அழகர் எங்கு வந்து கொண்டிருக்கிறார்? என்பது போன்ற விவரங்களைத் தங்களின் செல்போனிலிருந்தே தெரிந்து கொள்ளும் விதமாக மதுரை காவல்துறையினர் உருவாக்கியுள்ள `மதுரை காவலன்' எனும் ஆப்-ல் `டிராக் அழகர்'  என்ற கூடுதல் அம்சத்தை இணைத்துள்ளது. `மதுரை காவலன்' என்ற இந்த `ஆப்'-ஐ கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன் மூலம் கூட்ட நெரிசலையும் சமாளிக்க முடியும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!