ஷூ டாக்டரைத் தேடும் ஆனந்த் மகிந்த்ரா... பின்னணியில் சுவாரஸ்யத் தகவல்!

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மார்க்கெட்டிங் உத்தி மகிந்த்ரா நிறுவனத் தலைவரை கவர்ந்துள்ளது.

ஷூ டாக்டரைத் தேடும் ஆனந்த் மகிந்த்ரா... பின்னணியில் சுவாரஸ்யத் தகவல்!

கிந்த்ரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா ட்விட்டரில் எப்போதும் பிசியாக இருப்பவர். சில மாதங்களுக்கு முன் கேரளாவில் ஆட்டோ ஒன்று மகிந்த்ரா நிறுவனத்தின் தயாரிப்பான 'ஸ்கார்பியோ' போல வேடமிட்டு ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆட்டோவின் புகைப்படம் இணையத்தில் வைரலாக, ஆட்டோவுக்குச் சொந்தமானவரைக் கண்டுபிடித்து புத்தம் புது ஸ்கார்பியோ பரிசளித்து ஆனந்த் மகிழ்ந்தார்

செருப்பு தைக்கும் தொழிலாளியை தேடும் ஆனந்த் மகிந்த்ரா

சமீபத்தில், ஆனந்த் மகிந்த்ரா தனக்கு வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படம் ஒன்றை ட்வீட்  செய்திருந்தார். புகைப்படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த பேனரில், இங்கே காயமடைந்த ஷூக்கள்  குணப்படுத்தி தரப்படும். பார்வை நேரம் காலை 9 மணி முதல் 1 மணி வரை. லஞ்ச் டைம் 1 முதல் 2 மணி வரை. மீண்டும் 2 முதல் மாலை 6 மணி வரை ஷூக்கள்  குணப்படுத்தி தரப்படும். டாக்டர்.நரசிம்மன். ஜெர்மன் தொழில்நுட்பம் இங்கே கையாளப்படுகிறது. நோயாளிகள் (ஷூக்கள்)  பொறுமை காக்கவும்'' என்று கூறப்பட்டிருந்தது. 

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மார்க்கெட்டிங் உத்தி ஆனந்த் மகிந்த்ராவை மிகவும் கவர,  'இந்த மனிதர் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் இருக்க வேண்டியவர்' என்று ஆனந்த் மகிந்த்ரா ட்வீட் செய்திருந்தார். இவருக்காகவே சிறிய முதலீடு அளிக்க விரும்புகிறேன். இந்த புகைப்படம் யார் எடுத்ததோ எங்கு எடுக்கப்பட்டதோ தெரியவில்லை. இவரைப் பற்றி யாராவது அறிந்திருந்தால் எனக்குத் தகவல் கொடுங்கள்' என தன் ட்வீட்டில் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார். 

ஆனந்த் மகிந்ராவின் ட்வீட்டை இந்தச் செய்தி பதிவு செய்யும் வரை 10, 000 பேர்  லைக் செய்திருந்தனர். 2 ,400 பேர் பேர் ஷேர் செய்திருந்தனர். 'இந்தியாவில் சர்டிபிகேட் இல்லாத மேலாண்மை வித்தகர்கள் ஏராளமானோர் வாழ்கின்றனர். மாஸ்டர் கிளாஸ்' என்று ட்விட்டர்வாசிகள்  டாக்டர். நரசிம்மன் புகழ் பாடி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!