வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (18/04/2018)

கடைசி தொடர்பு:17:18 (18/04/2018)

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி பயணம்?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பன்வாரிலால் புரோஹித்

மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 12 நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சி.பி.சி.ஐ.டி-யும் ஆளுநர் நியமித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் விசாரணைக் குழுவும் நாளை முதல் விசாரணையைத் தொடங்கும் எனத் தெரிகிறது. விசாரணைக்காக நிர்மலா தேவி குறித்த ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி சேகரித்து வருகிறது. இதற்கிடையே, இவ்விவகாரத்தில் ஆளுநர்மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பவே, அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நேற்று மாலை ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நிர்மலா தேவி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை. எனக்கு 78 வயது பிறந்துவிட்டது. கொள்ளுப் பேரன் எடுத்துவிட்டேன். நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது அடிப்படை ஆதாரமற்றது; அபத்தமானது" எனக் கூறினார். 

செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் பெண் செய்தியாளர் கன்னத்தை ஆளுநர் தட்டிக்கொடுத்தது, அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் நாளை டெல்லி செல்லவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தன்னைச் சுற்றும் சர்ச்சைகள் குறித்து நாளை மத்திய அரசிடம் ஆளுநர் விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது. மேலும், காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் போராட்டம் எனத் தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆளுநர் டெல்லிக்குப் பயணமாவது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க