ரயில் நிலைய பெயர்ப்பலகைகளில் அழிக்கப்பட்ட இந்தி எழுத்துகள்!

ரயில் நிலைய பெயர்  பலகைகளில் அழிக்கப்பட்ட இந்தி எழுத்துக்கள்!

காரைக்குடி ரயில்வே நிலையத்தில் பெயர்ப்பலகையில் உள்ள இந்தி எழுத்துகள் கறுப்பு மையால் அழிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் கோட்டையூர் ரயில் நிலையங்களில், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பெயர்ப்பலகையில் உள்ள இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லையாம். இரவு வேலையில் கறுப்பு மை வைத்து இந்தி எழுத்துகளை அழித்திருக்கிறார்கள். 

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போராட்டங்களில் நாம் தமிழர் கட்சி தங்கள் உணர்வுகளை `நாங்கள் தமிழர்கள்' காவேரி நீர் எங்கள் உரிமையென்று'  என்று நாம் தமிழர் கட்சியினரும் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் போராடினர்.

அழிக்கப்பட்ட இந்தி எழுத்துக்கள்!

காரைக்குடி, கோட்டையூர் ரயில் நிலையங்களில் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்தவர்கள் இவர்களாக இருக்கலாம் என்கிற கோணத்தில் காரைக்குடி ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இரவு ரோந்து பணியில்  கவனக்குறைவாக  இருந்த போலீஸார்மீது நடவடிக்கை எடுக்க  ரயில்வே உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!