நோயாளிபோல் வந்த திருடன்! - சென்னை டாக்டருக்கு நடந்த துயரம் | Police arrests chain snatcher in Chennai Anna Nagar

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (18/04/2018)

கடைசி தொடர்பு:20:30 (18/04/2018)

நோயாளிபோல் வந்த திருடன்! - சென்னை டாக்டருக்கு நடந்த துயரம்

சென்னை அண்ணாநகரில் டாக்டரிடம் செயினைப் பறித்துச் சென்ற திருடனை தனியொருவனாகச் சிறுவன் சூர்யா மடக்கிப்பிடித்தார். 

திருடன்

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் அமுதா. மகப்பேறு மருத்துவரான இவர், வீட்டின் கீழ்தளத்தில் கிளினிக் நடத்திவருகிறார். நேற்றிரவு கிளினிக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அமுதாவிடம் அந்த இளைஞர், தன்னுடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளார். அவரை எப்போது சிகிச்சைக்கு அழைத்து வரலாம் என்று விவரம் கேட்டுள்ளார். இரவு 9 மணிவரை கிளினிக்கில் இருப்பதாக அமுதா தெரிவித்துள்ளார். இதையடுத்து இளைஞர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து மீண்டும் அதே இளைஞர்சிறுவன் சூர்யா முகத்தை மூடிக்கொண்டு கிளினிக்கு வந்துள்ளார். அப்போது அமுதா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

திடீரென அவரது அறைக்குச் சென்ற இளைஞர், அமுதா அணிந்திருந்த 10 சவரன் செயினைப் பறித்துக் கொண்டு மின்னல்வேகத்தில் பைக்கில் பறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா, திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே வெளியில் ஓடிவந்தார். இதைப் பார்த்தவர்கள் பைக்கில் சென்ற திருடனைப் பிடிக்க முயன்றனர். அப்போது, கிளினிக்கின் எதிரில் உள்ள கார் உதிரிபாகக் கடையில் வேலைபார்க்கும் சிறுவன் சூர்யாவும் திருடனை விரட்டினார்.

ஒருகட்டத்தில் மற்றவர்கள் எல்லோரும் சோர்ந்து போய்விட்டனர். இருப்பினும் புலிபாய்ச்சல் வேகத்தில் ஓடிய சூர்யா, தனியொருவனாகத் திருடனை மடக்கினார். அங்கு மக்கள் கூட்டம் கூடியதால், திருடனால் தப்ப முடியவில்லை. இதையடுத்து போலீஸாரிடம் திருடனை ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் பெயர் ஜானகிராமன் என்றும் திருவள்ளூர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. திருடனை விடாமல் துரத்திப் பிடித்த சிறுவன் சூர்யாவை பொதுமக்களும் போலீஸாரும் பாராட்டினர்.