`என் உயிருக்கு ஆபத்து' - வழக்கறிஞரிடம் புகார் சொன்ன நிர்மலா தேவி!

தன் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற வகையில் சிறைக்குள் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக வழக்கறிஞரிடம் நிர்மலா தேவி கூறியுள்ளார்.

நிர்மலா தேவி

பால சுப்ரமணியன் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 12 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியார்களிடம் பேசிய வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், ``தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற வகையில் சிறைக்குள் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக நிர்மலா தேவி கூறினார். அவருக்குத் தனி அறை கொடுக்கவில்லை; நாங்களும் கேட்கவில்லை.

ஆடியோவில் பேசியது தான்தான் என்றும், ஆனால், வெளிவந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அருப்புக்கோட்டையில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டியின் காரணமாகத் தம்மை வைத்து தேவாங்கர் கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் நிர்மலா தேவி என்னிடம் கூறினார். சிறைக்குள் அதிகாரிகள் அருகிலேயே இருந்ததால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. அடுத்து, சி.பி.சி.ஐ.டி வழக்கை விசாரிக்கும்போது, மீண்டும் நிர்மலாதேவியைச் சந்தித்துப் பேசுவேன்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!