நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு! | Actor Mansoor ali khan's bail case postponed

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (18/04/2018)

கடைசி தொடர்பு:20:35 (18/04/2018)

நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

பல்லாவரத்தில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் ஜாமின் மனு விசாரணையில் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது

நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனு மீதான விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.  

மன்சூர் அலிகான்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்தி அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மன்சூர் அலிகான் மீது அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மன்சூர் அலிகான் தரப்பில் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் வழக்கில் மன்சூர் அலிகானின் வழக்கறிஞர் சீனுவாசகுமார் ஜாமீன் அளிக்கக் கோரி வாதாடினார். அரசு வழக்கறிஞர் சதீஷ்பாபு, மன்சூர் அலிகான் மீது பிணையில் வெளிவர முடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது. அதோடு பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்துள்ளார். ஆகவே, இவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமின் மனு மீதான விசாரணையை நாளைக்கு (19.4.2018) ஒத்திவைத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close