`வாடகைக்கு வந்து வயதான தம்பதியினரின் வீட்டை அபகரித்த நபர்!’ - போலீஸ் விசாரணையில் அம்பலம்

வீட்டில் வாடகைக்கு வந்த செல்வமணியிடம்தான் இப்போது அந்த வீடே இருக்கிறது. ராஜேஸ்வரி, இரண்டு மகள்களுடன் இப்போது, வாடகை வீட்டில் இருக்கிறார். சொந்த வீட்டை மீட்க முடியாத சோகத்தில் ராஜேஸ்வரியின் கணவர் நாராயணன் இறந்தே போய் விட்டார்" என்றிருந்தது புகார் மனு. போலீஸ் துணை கமிஷனர் மல்லிகாவின் நேரடி மேற் பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜி.கண்ணன், தனிப்படைப் போலீஸாருடன்  இதுகுறித்த விசாரணையை

போலி ஆவணம் மூலம் வயதான தம்பதியிடமிருந்து வீட்டை அபகரித்த நபரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதியோர்

முதியோர் பொறுப்பில் இருக்கும் சொத்துகளை, எதிர்ப்பே இல்லாமல் அபகரித்து விடலாம் என்ற பேராசையில், ஒரு கும்பல் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், `நில அபகரிப்பு' குறித்தப் புகார்கள்தான் அதிகமாக இருக்கிறது. போலீஸாரும் அந்தக் கும்பலை விரட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கோ, ஓரிரு புகார்கள்தான் `உள்குத்து' காரணமாக கிடப்பில் இருக்கிறது. மற்றபடி, `நில அபகரிப்பு' குறித்தப் புகார்கள் மீது போலீஸார், தனிக் கவனம் செலுத்துகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சென்னை மத்தியக் குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் எம்.டி. கணேசமூர்த்தி பார்வைக்கு அப்படி ஒரு புகார் வந்திருக்கிறது.

``போரூர் அடுத்த நூம்பல் என்ற பகுதியில் ராஜேஸ்வரி என்ற மூதாட்டிக்கு 1200 சதுர அடியில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் வாடகைக்கு வந்த செல்வமணியிடம்தான் இப்போது அந்த வீடே இருக்கிறது. ராஜேஸ்வரி, இரண்டு மகள்களுடன் இப்போது, வாடகை வீட்டில் இருக்கிறார். சொந்த வீட்டை மீட்க முடியாத சோகத்தில் ராஜேஸ்வரியின் கணவர் நாராயணன் இறந்தே போய் விட்டார்"  என்று புகார் மனுவில் இருந்தது. போலீஸ் துணை கமிஷனர் மல்லிகாவின் நேரடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜி.கண்ணன், தனிப்படைப் போலீஸாருடன் இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டார். அப்போதுதான், ராஜேஸ்வரி நாராயணன் வீட்டை, செல்வமணிக்கு விற்றது போல் போலியான விற்பனைப் பத்திரம் தயாரித்து, அதற்கேற்ற ஆவணத்தையும் உருவாக்கியிருந்தது தெரியவந்துள்ளது. செல்வமணிக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் கிடைக்கும் வரை காத்திருந்த போலீஸார், அவை கைக்குக் கிடைத்ததும், அவரைக் கைது செய்துவிட்டனர். இப்போது புழல் மத்திய சிறையில் செல்வமணி இருக்கிறார். மூதாட்டி ராஜேஸ்வரி, தன் சொந்த வீட்டில் இருக்கிறார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!