வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (19/04/2018)

கடைசி தொடர்பு:02:00 (19/04/2018)

நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையைத் தொடங்கியது!

அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிர்மலா தேவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றம் செய்து காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

நிர்மலா தேவி வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள்

அதைத்தொடர்ந்து இன்று விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு, விசாரணை அதிகாரியும் சி.பி.சி.ஐ.டி. எஸ்பியுமான ராஜேஸ்வரி. ஐ.பி.எஸ்,  உதவி விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் நேரில் வந்தனர். பத்து  நாட்கள் இங்கு  முகாமிட்டு விசாரணை நடத்த உள்ளனர். இன்று மாலை விருதுநகரில் உள்ள குற்ற புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு இருவரும் சென்று நிர்மலாதேவி சம்பந்தப்பட்ட வழக்கின் ஒட்டு மொத்த எழுத்துப் பூர்வமான ஆவணங்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டனர். தற்போது அவைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

நாளையிலிருந்து சிபிசிஐடி விசாரணைக் குழு அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவி வீடு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகம், கல்லூரி ஆசிரியர்கள், தேவைப்பட்டால் மாணவிகளிடம்  முதல் கட்ட விசாரணையைத் தொடங்குகிறார்கள். நிர்மலா தேவியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க