வெளியிடப்பட்ட நேரம்: 00:01 (19/04/2018)

கடைசி தொடர்பு:06:25 (19/04/2018)

ராஜஸ்தானை எளிதில் வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்..! #RRvKKR

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதிய இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயஸ் அணியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ஐபிஎல் தொடரின் 15 வது லீக் ஆட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதிய இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயஸ் அணியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

Photo: Twitter/IPL

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள்  எடுத்தது. அதிகபட்சமாக ஷார்ட் 44 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணி சார்பில் நிதிஷ் ராணா மற்றும் குர்ரான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நரைனும் க்றிஸ் லின்னும் களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார் லின். அடுத்து வந்த உத்தப்பா - நரைன் ஜோடி அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. நரைன் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். பிறகு உத்தப்பாவுடன் கைக்கோத்த ராணா சிறப்பாக விளையாடினார். 48 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் உத்தப்பா. பிறகு, பொறுப்புடன் விளையாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப்பெறச் செய்தார். இறுதியில், ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா ஆட்டநாயனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க