வட நாகேஸ்வரம் : குன்றத்தூர் நாகேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

வட நாகேஸ்வரம்

சென்னை நவகிரக திருத்தலங்களில் ராகு பரிகாரத் தலமாக, 'வட நாகேஸ்வரம்' என அழைக்கப்படும் 'குன்றத்தூர் காமாட்சியம்மன் உடனுறை நாகேஸ்வரர் கோயில்' விளங்குகிறது. இங்கு,மூலவரான நாகேஸ்வரர், ராகுவின் அம்சமாகக் காட்சியளிப்பதால் ராகு தொடர்பான அனைத்துவித தோஷங்களுக்கும் இத்திருக்கோயில் பரிகாரத் தலமாக விளங்குகிறது. காமாட்சியம்மன் அம்பாளாகக் காட்சியளிக்கிறாள்.

வட நாகேஸ்வரம்

இத்திருக்கோயிலில், சித்திரைத் திருவிழா வருடா வருடம் 10 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 3-வது நாள் உற்சவத்தின்போது, அதிகார நந்தியின்மீது அமர்ந்து வலம்வரும் சிவபெருமானும், 5-வது நாள், பிள்ளையார் ரிஷபம் மீது அமர்ந்து வருதலும், சிவன் மற்றும் பார்வதி, காமாட்சியம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வலம்வரும் பஞ்சமூர்த்தி உற்சவமும், 7 - ம் நாள் நடைபெறும் தேர்த் திருவிழா மற்றும் 10 - வது நாள் நடைபெறும் திருக்கல்யாணமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வட நாகேஸ்வரர் கோயிலில் இன்று கொடியேற்றப்பட்டு, திருவிழா தொடங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!