சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது.

கொடியேற்றம்

நெல்லை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் சித்திரைத் திருவிழா 10 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழா நாள்களில் காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் சுவாமி மற்றும் அம்பாளை அலங்கரித்து, பல்வேறு வாகனங்களில் வீதி உலா எடுத்துவருவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண் டனர். சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன்பாக அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம், 9-ம் திருநாளான ஏப்ரல் 27-ம் தேதி நடைபெறும்.

கோயிலின் கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி, நேற்று (18-ம் தேதி) திருக்கோயிலின் யானை கோமதி, பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, கோயிலில் இருந்து கோமதி அம்பாள் சமேத சந்திரசேகர சுவாமி, பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!