`பிளாஸ்டிக் நம் மண்ணை நாசமாக்கிவிடும்' - பெரியகோயில் பக்தர்களிடம் திருநங்கை உருக்கம் | Transgender said emotionally, I am happily doing this work

வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (19/04/2018)

கடைசி தொடர்பு:14:52 (19/04/2018)

`பிளாஸ்டிக் நம் மண்ணை நாசமாக்கிவிடும்' - பெரியகோயில் பக்தர்களிடம் திருநங்கை உருக்கம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாவட்ட நிர்வாகத்தால் பிளாஸ்டி ஒழிப்பு பணியில் திருநங்கை ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தன் பணியை சிறப்பாகச் செய்ய அனைவரும் பாராட்டிச் செல்கிறார்கள்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள ராஜராஜன்  நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக எப்போதும் காவல்துறையினர் இருப்பார்கள். காவலர்கள்  இருக்கும் இடத்திலேயே ஒருவர் நின்றுகொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளில் பூஜைக்குத் தேவையான பொருள்களை எடுத்து வருபவர்களிடம் ''வாங்க வணக்கம் கோயிலுக்கு உள்ளே பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது'' எனப் பவ்யமாக சொல்கிறார். பின்னர் மூங்கிலில் செய்யப்பட்ட தட்டு ஒன்றைக் கொடுத்து, இதில் வைத்து எடுத்துச் செல்லுங்கள் என்பதோடு பிளாஸ்டிக் பையை வாங்கிக் கொள்கிறார். அவரை கோயிலுக்கு வருபவர்கள் ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் பார்த்துப் பாராட்டிச் செல்கிறார்கள். பக்தர்கள் வெளியே செல்லும்போது, ''இங்கு மட்டும் இல்லை. எங்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தாதீங்க. அவை  நம்மை மட்டும் இல்லை நம் மண்ணையும் நாசமாக்கும்'' என  உருகிப் பேசி ஆச்சர்யப்பட வைப்பதோடு புருவம் உயர்த்திப் பார்க்கவும் வைக்கிறார் திருநங்கை ஒருவர்.

திர நங்கை

தஞ்சாவூர் பெரியகோயிலில் மாவட்ட நிர்வாகமும், தொண்டு நிறுவனமும் இணைந்து பிளாஸ்டிக் இல்லா பெரிய கோயில் என்ற திட்டத்தை கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி வைத்துச் செயல்படுத்தி வருகிறது. கோயில் வளாகத்தில் பிளாஸ்டிக் இல்லா பெரிய கோயில் என்ற போர்டை வைத்துள்ளனர். இதில் பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களை வாங்கிக் கொள்வதற்காக திருநங்கை ஒருவரை பணிக்கு அமர்த்தி அசரவைத்துள்ளார் கலெக்டர் அண்ணாத்துரை.

திருநங்கை சத்யாவிடம் பேசினோம். ''இந்தப் பணி தற்காலிகமானதுதான். இதை நீங்கள் சிறப்பாகச் செய்தால் நிரந்தரமாகப் பணியில் அமர்த்தப்படுவீர்கள் என்று  என்னை கலெக்டர் உள்ளிட்டவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் என பெருமை பொங்க, மகிழ்ச்சியுடன் சொல்கிறார் சத்யா.

``என்னைப் போன்ற திருநங்கைகள் சரியான வாய்ப்பு கிடைக்காததால் பிச்சை எடுப்பது. தவறான காரியங்களில் ஈடுபடுவது போன்ற சூழ்நிலை உண்டாகிறது. நான் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். தஞ்சாவூர் கலெக்டர்கள் பலரிடம் எனக்கு நல்ல வேலை கொடுங்கள் என பல முறை மனு கொடுத்தேன். இப்போது இருக்கும் கலெக்டர் அண்ணாத்துரையிடம் மனு கொடுத்து எனக்கு  கோயில்களில் எதாவது பணிகள் இருந்தால் கொடுங்கள் சிறப்பாகச் செய்வேன் சார் என்றேன். அதற்கு அவர் பொறுத்திருமா. உனக்கு நல்ல வாய்ப்பு வரும்போது நானே சொல்கிறேன் என்றவர் அதன்படியே என்னை அழைத்து இந்தப் பணியில் அமர்த்தியிருக்கிறார்.

திருநங்கை

திருநங்கையான நான் பலபேர் வரும் இடத்தில், காவலர்கள் உடன் நின்றுகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்புப் பணியைச் செய்வதில் பெருமைப்படுகிறேன். இத்தனை நாள்  நான்பட்ட துயரத்துக்கு இந்தப் பணியை வாழ் நாள் மகிழ்ச்சியாகப் பார்க்கிறேன். அர்த்தநாரீஸ்வரரான நான், அதுவும் உலகப்புகழ் பெற்ற பெரிய கோயில் வாசலில் சிவனுக்கு முன் நின்றுகொண்டு சமூகத்துக்கான பணிக்ச் செய்ய வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

திருநங்கை என்றாலே ஒருவித பார்வை பார்க்கும் சமூகத்தில், நான் கோயிலுக்கு முன் நின்று பிளாஸ்டிக் எடுத்துச் செல்லக்கூடாது என்று மட்டும் சொல்லாமல், மூங்கில் தட்டை கொடுத்து இதில் எடுத்துச் செல்லுங்கள் எனச் சொல்லி பிளாஸ்டிக் பொருள்களினால் ஏற்படும் பேராபத்தையும் எடுத்துச் சொல்கிறேன். கோயிலுக்கும் வரும் பக்தர்களும் என்னை ஒரு திருநங்கைதானே என நினைக்காமல் எனக்கும் மதிப்பளித்து நான் சொல்வதைச் செய்கிறார்கள். என்னைப் போலவே எல்லா திருநங்கைகளுக்கும் நல்ல வாய்ப்பைத் தாருங்கள் அவர்கள் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்கள்  நடக்கும்'' என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close