வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (19/04/2018)

கடைசி தொடர்பு:15:15 (19/04/2018)

`ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா' - கமல்ஹாசன் ட்வீட்

உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க தமிழக அரசை மக்கள் வலியுறுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்றங்களை விசாரிக்கும் வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பல மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த அமைப்பு இன்னும் உருவாக்கப்பட்டவில்லை.

இதுதொடர்பான வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், `உச்ச  நீதிமன்றத்துக்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு, உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும். லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து' என்று பதிவிட்டுள்ளார்.