வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (19/04/2018)

கடைசி தொடர்பு:15:30 (19/04/2018)

மனித- விலங்கு மோதல்களை தடுக்க அதிவிரைவுச் செயல் குழு! நீலகிரியில் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக மனித- விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக வனத்துறை சார்பில் கூடலூரில் அதிவிரைவுச் செயல் குழு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஊட்டியில் இரண்டாவது அதிவிரைவுச் செயல் குழுவை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக மனித- விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக வனத்துறை சார்பில் கூடலூரில் அதிவிரைவுச் செயல் குழு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஊட்டியில் இரண்டாவது அதிவிரைவுச் செயல் குழுவை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.

12 நபர்கள் கொண்ட அதிவிரைவுச் செயல் குழுவில் உள்ள வீரர்களுக்கு மனித-விலங்கு மோதல்களைக் கையாள்வது, காட்டுத் தீ உள்ளிட்ட சுற்றுச் சூழல் தொடர்பான அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினருக்கு மனித-விலங்கு மோதலின்போது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த உதவும் உபகரணங்கள், பாம்புப் பிடிக்க உதவும் உபகரணங்கள் உட்பட பல நவீன உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதிவிரைவு குழுவின் முக்கிய பணி, மனித-விலங்கு மோதல்களை தவிர்ப்பதாகவே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், ``நீலகிரி மாவட்டம் மிக பெரிய வனப் பகுதியைக் கொண்டது. இதில் மனித-விலங்கு மோதல்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் காட்டெருமையால் மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல, கூடலூர் பகுதியில் யானைகளால் பாதிப்பு. கூடலூரில் அதிவிரைவு செயல் குழு ஏற்கெனவே இருக்கிறது. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள குழு மக்கள் விலங்குகளைச் சமாளிக்கவும், வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படும் என அச்சத்தில் உள்ள விவசாயிகளுக்கும் உதவி செய்வார்கள். பொதுமக்களுக்கு விலங்குகளால் பாதிப்பு நேரிட்டால் 1800 4253968 என்ற எண்ணில் உடனடியாக அதிவிரைவுச் செயல் குழுவைத் தொடர்புகொள்ளலாம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க