`சத்யபிரியாவைக் கைது செய்ய தடை' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

அ.தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பாவுக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சட்ட ஆலோசகர் ராமசாமி என்பவரைச் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ராமசாமி ஏற்கெனவே மதுரையைச் சேர்ந்த சத்யபிரியா என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இதானால் சசிகலா புஷ்பாவைத் திருமணம் செய்ய நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், தடையை மீறி இவர்களது  திருமணம் நடைபெற்றது. 

சத்யபிரியா

இதற்கிடையே, தன்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு சசிகலாபுஷ்பாவைத் திருமணம் செய்து கொண்டதாக சத்யபிரியா, ராமசாமி மீது புகார் கொடுத்தார். பதிலுக்கு ராமசாமி டெல்லி போலீஸிடம் புகார் கொடுத்தார். சத்யபிரியாவும் அவர் சகோதரர் மணிகண்டனும் டெல்லியில் வசிக்கும் தனது முதல் மனைவியின் குழந்தையைக் கொடுமைப்படுத்தியதாக டெல்லி வடக்கு அவென்யூ காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ராமசாமி. மேலும், போஸ்கோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களை கைது செய்ய டெல்லி போலீஸ் மதுரையில் நான்கைந்து நாள்களாக வலம் வந்தது. 

ஆனால், சத்யபிரியாவும், அவர் தம்பியும் வீட்டில் இல்லாததால் வருகிற 24-ம் தேதி டெல்லி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றது. இந்நிலையில் தன்னை ஏமாற்றிய ராமசாமி, தன் மீது பொய்வழக்கு போட்டுள்ளார். எனவே, முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சத்யபிரியா முறையிட்ட நிலையில், இன்று அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!