வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (19/04/2018)

கடைசி தொடர்பு:23:30 (19/04/2018)

`நீர் நிலைகளைத் தூர்வாரப் போகிறேன்' - நடிகர் சிம்பு பேட்டி!

சிம்பு

தமிழகத்தின் முன் உதாரணமாகத் திகழும் சேலம் மூக்கனேரியை நடிகர் சிம்பு இன்று பார்வையிட்டார். பிறகு ஏரியைப் பராமரித்து வரும் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷோடு பரிசலில் சென்று ஏரியைச் சுற்றிப் பார்த்தார். 

பிறகு சேலம் மாமாங்கம் ரோட்டில் உள்ள ரேடியேஷன் ஹோட்டலில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது, ``காவிரி நீர் பிரச்னையில் நான் சொன்ன கருத்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு யாரையும் குறைச்சொல்ல விரும்பவில்லை. இந்தப் பிரச்னையை ஒரு நாளில் விட்டு விட்டு போகவில்லை. நீர்நிலைகளைப் பார்வையிடுவதற்காக இங்கு வந்திருக்கிறேன். பியூஸ் மாதிரி ஆட்கள் மூலம் நமக்குத் தெரியாத விஷயங்களை கூட தெரிந்துகொள்ள முடியும். சாதாரண குடிமகனாக நான் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன். இரு மாநிலத்தை சேர்ந்த அனைவரையும் ஒருங்கிணைத்து செய்யலாம் என்று முடிவு செய்கிறோம். அதற்கு உங்களுடைய சப்போர்ட் வேண்டும்" என்றார். இதனையடுத்து செய்தியாளர்கள் சில கேள்விகளை முன்வைத்தனர்.  

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக முழுவதும் போராட்டங்கள் நடத்துகிறார்களே?

அது சம்பந்தமான பிரச்னைக்காக வரலை. இது வேறு ஒரு அணுகுமுறை. அதையும் இதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

என்ன பண்ண போகிறீர்கள்?

அதற்காகத்தான் இங்கு பார்த்து பேசுவதற்காக வந்திருக்கிறேன்.

அரசியல் தலைவர்களைச் சந்திக்கப் போகிறீர்களா?

இதில் எந்த ஒரு அரசியலும் இல்லை. அனைவரும் சேர்ந்து செய்வோம்.

என்ன திட்டம்தான் வைத்திருக்கிறீர்கள்?

நம் காடுகளையும், நீர் நிலைகளையும் காப்பதற்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். அது பற்றி பேசி விட்டு செய்வோம்.

நீங்கள் நீர்நிலைகளைத் தூர் வாருவீர்களா?

நான் தூர் வாருவதற்கு தானே வந்திருக்கிறேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க