தூத்துக்குடியில் ஹெச்.ராஜா உருவபொம்மை எரிப்பு - 25 பேர் கைது!

பா.ஜ.க-வின்  தேசியச் செயலர் ஹெச்.ராஜாவைக்  கண்டித்து,  அவரின் உருவ பொம்மையை தி.மு.க-வினர் எரித்தனர். இதுதொடர்பாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஹெச்.ராஜா

தி.மு.க.,  தலைவர் கருணாநிதியின் குடும்பம் பற்றி,  பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டரில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில்,  பழைய பேருந்து நிலையம் அருகில் ஹெச். ராஜாவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென, ராஜாவின் உருவ பொம்மைக்குத்  தீ வைத்துக் கொளுத்தினர்.  உருவ பொம்மை எரிப்பில் ஈடுபட்ட 25 பேர்  மீது மத்திய பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

இதேபோல, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பும்,  தி.மு.க-வினர்  ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து, செருப்பால் அடித்து,  அவருக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். 

உடனே காவல்துறை தண்ணீர் ஊற்றி, தீயை அணைத்து உருவ பொம்மையை அகற்றி, போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினரை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!