தொடக்கப்பள்ளியில் நடந்த ஃபேர்வெல் விழா! அரசுப் பள்ளி கலக்கல் | send off function in elementary school

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (20/04/2018)

கடைசி தொடர்பு:07:55 (20/04/2018)

தொடக்கப்பள்ளியில் நடந்த ஃபேர்வெல் விழா! அரசுப் பள்ளி கலக்கல்

பள்ளியோ, கல்லூரியோ நாம் அதை விட்டு பிரியும்போது மனதில் ஒரு ஏக்கம் இருக்கும். அந்தப் பிரிவில்கூட நல்ல திருப்பத்தை அமைத்துக்கொடுத்திருக்கு இங்கும் ஒரு அரசுப்பள்ளி

 

அரசுப்பள்ளி

பள்ளியோ, கல்லூரியோ நாம் அதை விட்டுப் பிரியும்போது மனதில் ஓர் ஏக்கம் இருக்கும். அந்தப் பிரிவில்கூட நல்ல திருப்பத்தை அமைத்துக்கொடுத்திருக்கு இங்கு ஒரு அரசுப்பள்ளி. மதுரை ஒத்தக்கடை துவக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்து பள்ளியை விட்டு வெளியே செல்லும் மாணவர்களுக்கு விழா கொண்டாடப்பட்டது .

அந்த விழா `பிரிவு உபசாரவிழா' என்ற தலைப்பில் கொண்டாப்பட்டது. தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியை மாலா, மல்லிகா, மெர்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 'வாசிப்பைச் சுவாசிப்போம்' என்ற தலைப்பில் குழந்தைகள் உரையாடினர். குழந்தைகள் தாங்கள் படித்த கதைகளை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர் கவிஞர் லிபிஆரண்யா தன்னுடைய சிறு வயதில் தான் படித்த புத்தகங்களையும் அது தன்மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் எடுத்துரைத்தார். பல அறிஞர்கள் புத்தக வாசிப்பின் மூலம் பல அரியக் கண்டுபிடிப்புகள் கண்டு பிடித்தமையும் படைப்பாற்றல் திறன் கற்பனைத் திறன் சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியன புத்தக வாசிப்பின் மூலம் மேம்படும் என எடுத்துரைத்தார்.  புத்தகங்கள் அறிவு கோயிலின் வாசல்கள், புத்தகங்கள் நல்ல நண்பர்கள் எனவும் புத்தகம் என்னும் நல்ல நண்பனின் கைபிடித்து கடைசி வரை நடக்க வேண்டும் எனக் கூறினார். அதனால் வாழ்க்கை முழுவதும் புத்தக வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டதாக ஆசிரியர் மோசஸ் தெரிவித்தார். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்துச் செல்கிற அனைத்துக் குழந்தைகளுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் காளிதாஸ் பரிசுகளை வழங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். மாணவி ஆஷாபானு தன் தமிழ் அழகு கொஞ்சும் நடையால் நன்றி தெரிவித்து விழாவை முடித்துவைத்தார்.