வெளியிடப்பட்ட நேரம்: 07:37 (20/04/2018)

கடைசி தொடர்பு:07:37 (20/04/2018)

ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் பெயர் வெளியீடு..!

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் ஹிந்தி ரீமேக் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாலிவுட்டில் சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் வித்யா பாலன் நடித்து, கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம், 'தும்ஹாரி சூலு'. இந்தப் படத்தை இயக்குநர் ராதாமோகன் தமிழில் ரீமேக் செய்யப்போவதாகத் தகவல்கள் வந்தன. பிறகு, அதில் வித்யா பாலன் வேடத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாகவும், 'உங்கள் ஜோ' என்பதுதான் படத்தின் தலைப்பு எனவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

ஜோதிகா நடிக்கும் படம்

இந்நிலையில், ஜோதிகா நடிப்பது உறுதி என்றும், பெயர் இன்னும் முடிவாகவில்லை என்றும் படக்குழு அறிவித்தது. 'ஒரு கிடாரியின் கருணை மனு', 'குரங்கு பொம்மை' எனத் தன் எதார்த்த நடிப்பில் மக்களைக் கவர்ந்த நடிகர் விதார்த், இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தை 'போஃப்டா' தனஞ்செயன் தயாரிக்கிறார். படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த சமயத்தில், 'காற்றின் மொழி' என்பதுதான் ஜோதிகா நடிக்கும் 'தும்ஹாரி சூலு' தமிழ் ரீமேக் படத்தின் பெயர் என்று படக்குழு அறிவித்தது. ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருந்த 'மொழி' படத்தில் வந்த ஒரு பாடலின் ஆரம்ப வரி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க