வெளியிடப்பட்ட நேரம்: 10:19 (20/04/2018)

கடைசி தொடர்பு:10:19 (20/04/2018)

சிகரெட் வாங்கித் தராதவருக்கு அடி, உதை; இது புதுச்சேரி கலாட்டா

சிகரெட் வாங்கித் தராதவரை அடித்து உதைத்துவிட்டு இரண்டு பேர் தப்பிச்சென்றது, புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி

புதுச்சேரி, திருவண்டார்கோவில் ஜெயராம் நகரைச் சேர்ந்தவர், முகம்மது ஃபரூக். இவர், திருபுவனையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். நேற்று மாலை, இவர் தனது வீட்டிலிருந்து சிகரெட் வாங்குவதற்காக திருவண்டார்கோவில் கடைவீதிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கிருந்த குணசேகரன், சுபாஷ் என்ற இரண்டு இளைஞர்கள் தங்களுக்கும் சிகரெட் வாங்கித் தருமாறு முகம்மது ஃபரூக்கிடம் அதட்டிக் கேட்டிருக்கின்றனர். அதற்கு குணசேகரன், சுபாஷ் இருவரும் கடுமையான போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் முகம்மது ஃபரூக், அவர்களுக்கு சிகரெட் வாங்கித் தருவதற்கு மறுத்துவிட்டார். அதனால், இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குணசேகரனும் சுபாஷும், முகம்மது ஃபரூக்கை கற்களால் கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். அந்தத் தாக்குதலால் தலையில் பலத்த காயமடைந்த ஃபரூக், நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதையடுத்து, அங்கு வந்த திருபுவனை எஸ்.ஐ., பிரியா, ஃபரூக்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அதோடு, தப்பிச்சென்ற இருவர் மீதும் போலீஸ் வழக்குப்பதிவுசெய்து அவர்களைத் தேடிவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், இதே பகுதியில்தான் ஆம்லெட்டில் உப்பு இல்லை என்பதற்காக ஹோட்டல்மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க