தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி மாணவியைக் கடத்திய ஆசிரியர்..! | teacher kidnapped a girl student in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (20/04/2018)

கடைசி தொடர்பு:11:01 (20/04/2018)

தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி மாணவியைக் கடத்திய ஆசிரியர்..!

நிர்மலா தேவி போல மாணவிகளை மூளை சலைவை செய்த ஆசிரியர்

தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி மாணவியைக் கடத்திய ஆசிரியர்..!

னக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய ஆசிரியர், ப்ளஸ்-2 மாணவியைக் கடத்திய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவியை கடத்திய ஆசிரியர் ஒட்டிய போஸ்டர்

நிர்மலா தேவி விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றொரு ஆசிரியர், மாணவியுடன் தலைமறைவாகியுள்ளதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ்வர்ஷன், மதுரையில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலைபார்த்துவந்தார். திருமணமான இவர், மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, வாட்ஸ்அப்பில் ஆபாசப் புகைப்படங்களை அனுப்புவதுபோன்ற சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ப்ளஸ-2 மாணவி ஒருவரை ஆசிரியர் காதல் வலையில் வீழ்த்தினார். இரு நாள்களுக்கு முன், அந்த மாணவியுடன் ஆசிரியர் தலைமறைவானார். 

முன்னதாக, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தன் தம்பி உதவியுடன், தான் வேலைபார்த்து வந்த பள்ளி வளாகத்தைச் சுற்றி தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியுள்ளார். ராஜேஷ்வர்ஷன் இறந்துவிட்டதாகக் கருதிய பள்ளி நிர்வாகம், பள்ளியில் இறுதி அஞ்சலி செலுத்திய காமெடியும் அரங்கேறியது. பள்ளியில் வேலைபார்த்துவந்த ஆசிரியர் இறந்துபோனால், வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவார்கள். இங்கே, ராஜேஷ்வர்ஷன் வீட்டுக்கு ஆசிரியர்கள் யாரும் போகவில்லை. ஆசிரியர் ராஜேஷ்வர்ஷனின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. மாணவியைக் காணாத பெற்றோர், கரிமேடு போலீஸில் புகார் செய்தனர். மதுரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், மாணவியுடன் தலைமறைவான ஆசிரியரைப் பிடிக்க இரு தனிப்படைகளை அமைத்துள்ளார். 

மாணவிகளை மிரட்டிப் பணம் பறிப்பதையும், தன்னிடம் டியூஷன் படிக்க வரும்படி மாணவிகளை ராஜேஷ்வர்ஷன் கட்டாயப்படுத்துவார் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க