கரூர் அகதிகள் முகாமைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்..!

  

கரூர் மாவட்டம்  ராயனூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் ஆய்வுசெய்தார். 'இங்கு, அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் அலுவலர்கள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன்  ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, 'இம்முகாமில் சுமார் 453 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களது அடிப்படைத்தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை வசதி, கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் பணிகள், சாலை வசதி, குடிநீர் தேவையை சமாளிப்பதற்காக ஆழ்துளைக் கிணறுகளை மறுசீரமைக்கவும், கூடுதலாக குப்பைத்தொட்டிகள் வைக்கவும், சுற்றுப்புறத்திலுள்ள குப்பைகளை அகற்றவும், சம்பந்தப்பட்ட  துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் ஆய்வுசெய்யப்பட்டது. 'இந்த மக்களுக்கு ஏதேனும் குறைகள் ஏற்பட்டால், அலுவலர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு பிரச்னையை கலைய வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!