நிர்மலா தேவி விவகாரத்தில் மாணவிகளிடம் விசாரணை! | Nirmala devi case - Students appeared before enquiry commission

வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (20/04/2018)

கடைசி தொடர்பு:13:04 (20/04/2018)

நிர்மலா தேவி விவகாரத்தில் மாணவிகளிடம் விசாரணை!

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. 

விசாரணை அதிகாரி சந்தானம்

இந்த வழக்கு விசாரணையை அனைவரும் உற்றுநோக்கி வரும் நிலையில், சி.பி.சி.ஐ.டி டீம் கையில் எடுத்து எஸ்.பி ராஜேஸ்வரி தலைமையில் விசாரணையத் தொடங்கியுள்ளார்கள். நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரவு முழுவதும் துணைவேந்தர் உட்பட 10 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கண்காணிப்புக் கேமரா பதிவுகளை சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள நிர்மலா தேவியின் நெருங்கிய நண்பர்களான பேராசிரியர் கருப்பசாமி, முருகன் இருவரையும் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதேபோல் ஆளுநர் நியமித்துள்ள விசாரணை அதிகாரியான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானமும் நேற்று மாலையிலிருந்து விசாரணையைத் தொடங்கினார். துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னய்யா, டீன் நல்லகாமு ஆகியோரிடம் விசாரணை செய்தார். அதைத்தொடர்ந்து இன்று அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரயில் விசாரணை நடத்தி வருகிறார். இதில் சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க