5 ஆண்டுகளில் ரூ. 589 கோடி சொத்து சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்! | karnataka Minister sivakumar assets up Rs 589 crore in last five years

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (20/04/2018)

கடைசி தொடர்பு:17:23 (20/04/2018)

5 ஆண்டுகளில் ரூ. 589 கோடி சொத்து சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்!

கர்நாடக அமைச்சரின் சொத்து மதிப்பு உயர்வு வியக்க வைக்கிறது.

5 ஆண்டுகளில் ரூ. 589 கோடி சொத்து சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்!

ர்நாடகத்தில், காங்கிரஸ் கட்சி அமைச்சர் ஒருவர், 5 ஆண்டுகளில் ரூ.589 கோடி சொத்து சேர்த்து இமாலய சாதனை படைத்துள்ளார். 

அமைச்சர் டி.கே . சிவக்குமார் சொத்து மதிப்பு இமாலய உயர்வு

இவர் வேறு யாருமல்ல... கடந்த ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது, குஜராத்திலிருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பெங்களூருக்கு அழைத்து வந்து குளிப்பாட்டி அனுப்பியவர்தான். இந்த அமைச்சரின் பெயர், டி.கே.சிவக்குமார். கர்நாடக எரிசக்தித்துறை அமைச்சராக இருந்துவருகிறார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. கனகபுரா தொகுதியில் போட்டியிட டி.கே.சிவக்குமார் 17-ம் தேதி மனுத் தாக்கல் செய்தார். தன் பிரமாணப் பத்திரத்தில், சொத்து மதிப்பு ரூ.840 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலின்போது, இவரின் சொத்து மதிப்பு ரூ.251 கோடியாக இருந்தது. 2008-ம் ஆண்டு ரூ.75 கோடியாக இருந்தது. 

இதில்,ரூ 70,94,84,974 (70 கோடி) கோடி நகரும் சொத்தாகவும், நிலையான சொத்துக்களாக ரூ. 548,85,20,592 (548 கோடி) மொத்தமாக  ரூ.619 கோடி என்று சிவக்குமார்  குறிப்பிட்டுள்ளார். சிவக்குமாருக்கு கிரானைட் பிசினஸ், கல்லூரிகள், மீடியா நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்ளன. சிவக்குமாரின் மனைவி உஷாவின் பெயரில் ரூ.112 கோடிக்கு சொத்து உள்ளது. இவரின் குழந்தைகள் பெயரிலும் கோடிக்கணக்கில் வங்கியில் பணம் உள்ளது. 

பொருளாதார குற்றப்பிரிவின் கீழ், இவர்மீது இரு வழக்குகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பாவின் சொத்து மதிப்பு, ரூ.3 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க