மதுரையைக் கலக்கிய அப்பளராஜா நீதிமன்றத்தில் சரண்!

அப்பளராஜா நீதிமன்றத்தில் சரண்!

காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடி அப்பளராஜா, மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் அப்பள கம்பெனியில் வேலைசெய்தவர், அப்பள ராஜா. 13 வயதில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை ஆரம்பித்த இந்த ராஜா, அரசியல்வாதிகளுக்கு பக்கபலமாக இருந்தார். அப்பள கம்பெனியில் வேலைசெய்ததால், நாளைடைவில் அந்தப் பெயர் அவரிடம் தொற்றிக்கொண்டு, போலீஸ் ரெக்கார்டு வரை வந்தது. பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதால், அவரை மதுரை மாநகர் காவல்துறை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த  பிரபல ரவுடி அப்பளராஜா, மதுரை மாவட்ட  6-வது கூடுதல் நீதிமன்ற அமர்வில் இன்று சரணடைந்தார் . சின்னச்  சின்ன கொலை, கொள்ளைகளுக்கு நேரில் செல்லாமல், சிறுவர்களை அனுப்பிவைத்து காரியம் சாதிக்கும்  அப்பளராஜா, நாட்டு வெடிகுண்டுகளால் எதிரிகளை நிலைகுலையச் செய்தபின் போட்டுத்தள்ளும் இவரின் யுக்தி, மிகவும் பயங்கரமாகப் பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது அப்பள ராஜா சரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!