கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியாவின் சஸ்பெண்டு உத்தரவு ரத்து! | Coimbatore Law College student Priya's Suspend order cancel

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (20/04/2018)

கடைசி தொடர்பு:18:05 (20/04/2018)

கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியாவின் சஸ்பெண்டு உத்தரவு ரத்து!

கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியாவின் சஸ்பெண்டு உத்தரவு, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியாவின் சஸ்பெண்டு உத்தரவு, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சட்டக்கல்லூரி மாணவி பிரியா

கோவை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரியா. இதனிடையே, கடந்த வாரம், பொது விவகாரங்கள் குறித்து பேராசிரியர் ஒருவர் பேச அழைத்ததையடுத்து, காஷ்மீர் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து பிரியா பேசியுள்ளார். அப்போது, பிரியாவுக்கும் சக மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து, கோவை சட்டக்கல்லூரி பேராசிரியர் அம்மு மற்றும் சக மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பிரியாவை சஸ்பெண்டு செய்து, சட்டக்கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணண் உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதைத்தொடர்ந்து, மாணவி பிரியாவின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும் மாணவ அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காகக் கல்லூரி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரியா ஆஜரானார்.

இந்நிலையில், மாணவி பிரியாவின் சஸ்பெண்டு உத்தரவை தற்காலிகமாக ரத்து செய்வதாக, முதல்வர் கோபாலகிருஷ்ணன் ஆணையிட்டுள்ளார். அதில், “விசாரணைக்குழு தாக்கல் செய்துள்ள, இடைநிலை அறிக்கை அடிப்படையில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்வரை, மாணவி பிரியாவின் உத்தரவு தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.